திருமயம் கோயில் உண்டியல் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மசந்தை கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோயிலில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (நவம்பர் 22) அதிகாலை பக்தர்கள் கோயிலுக்குச் சென்றபோது உண்டியல் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வயல் பகுதியில் அந்த உண்டியல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அரிமளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி