திருமயம்: ராயவரம் வாக்கியாத்தை சேர்ந்தவர் முருகோ மகள் பிரவீனா (18) டிப்ளமோ முடித்தவள். இவர் திருமத்தில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று ராயவரம் கடைவீதிக்கு சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுக்கச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.