திருமயம்: அரசமலை உணவகத்தில் தீ விபத்து!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த அரசமரையில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் நேற்று மின் கசிவு காரணமாக திடீரென தீ பற்றியது உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொன்னமராவதி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர் பின்னர் விசாரணை செய்ததில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தது. வினோத் குமார் தலைமையில் தீ அணைக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் இனிமேல் இரவில் கடையை பூட்டி செல்லும்பொழுது மின்சாரத்தை துண்டித்து செல்ல வேண்டும் என்றும் அதேபோல் எந்த ஒரு மோட்டர் சம்பந்தப்பட்ட மின்சாரத்திற்கும் எர்த் சரியாக உள்ளதா என சம்பந்தப்பட்ட எலக்ட்ரீசியனை கொண்டு சோதனை செய்துகொள்ளபடியும் தற்பொழுது மழைக்காலம் என்பதால் இவ்வாறு நடக்க உள்ளது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி