திருமயம்: அரிமளம் ஒன்றியம் இரும்பாநாடு காலனியைச் சேர்ந்தவர் வேலன் மனைவி மாரியம்மாள் (72) இவர் தனது உறவினர்கள் சத்தியநாதன் (55), இடும்பன் (80) ஆகியோருடன் நேற்று முன்தினம் கே.புதுப்பட்டி சென்றுவிட்டு ஆட்டோவில் ஊர் திரும்பினார். ஏத்தநாடு அய்யனார்கோயில் அருகே வந்தபோது, காரைக்குடியிலிருந்து ஏம்பல் நோக்கிச் சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் வலதுபுறத்தில் மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த 3 பேரும் படுகாயமடைந்த நிலையில், புதுக்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரியம்மாள் (72) நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.