திருமயம் அருகே உள்ள கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பந்தயத்தில் 29 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பந்தயம் தொடக்க இடத்திலிருந்து எட்டு மைல் தூரம் சென்று திரும்பவேண்டும் என்பது நிபந்தனை. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பந்தயம் மாட்டு வண்டிகள் தங்கள் மாட்டு வண்டிகளுடன் கலந்துகொண்டனர்.