திருமயம் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை எம்ஜிஆர் மாளிகையில் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் பி. கே. வைரமுத்துவின் அறிவுறுத்தலின்படி, திருமயம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணலில் கலந்து கொள்ள உறுப்பினர்கள் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.