வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் புதுப்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜா, கார்த்திக்கேயன், குமரப்பன். ராஜா துாத்துக்குடியிலும், கார்த்திகேயன் கோவையிலும் வசித்து வந்தனர். வெளியூரில் இருப்பதால் 3 வீடுகளும் பூட்டிக்கிடந்தன. இந்நிலையில் நேற்று காலை இந்த வீடுகளில் மின்விளக்குகள் எரிந் தன. இதை பார்த்து சந்தேகமடைந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் 3 பேருக்கும் தகவல் தெரிவித்தனர். 3 பேரும் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்ததும் பொன்னமராவதி டிஎஸ்பி ஜூலியஸ்சீசர் மற்றும் போலீசார் வந்து கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது 3 வீடுகளிலும் 20 பவுன் நகை, 20 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள், 2 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனதாக தெரிவிக் கப்பட்டது. கைரேகை நிபுணர் தடயங்களை சேகரித்தார். ஒரே நாளில் 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் கிராம மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?