இந்நிலையில் தனது மகளை முருகேசன் கிண்டல் செய்ததையறிந்த பொப்பன் ஞாயிற்றுக் கிழமை(செப்.29) மாலை வீராணம்பட்டி விலக்கு சாலையில் உள்ள டீக்கடை அருகே முருகேசனை அழைத்துக் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன் வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து பொப்பனைக் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீஸார் முருகேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.