பொன்னமராவதி வலையபட்டி அருகே உலகம்பட்டி சாலையில் வந்தபோது, தீடீரென காரிலிருந்து புகை வரத் தொடங்கியது. உடனடியாக காரில் இருந்த அனைவரும் காரை விட்டு இறங்கிய நிலையில் கார் தீப்பற்றி கரும்புகையுடன் எரியத் தொடங்கியது.
தகவலின்பேரில், அங்கு வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீவிபத்தில் கார் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. இதுகுறித்து பொன்னமராவதி காவல் ஆய்வாளர் பத்மா விசாரித்து வருகிறார்.