புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரவதி அருகே மலையலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (48), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு தொழிலில் திடீர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாளாக மனஉளைச்சலில் இருந்த இவர் அவரது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.