புதுக்கோட்டை மாநகராட்சி கலைஞர் பூங்காவில் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக மாலை நேரங்களில் குடும்பத்துடன் வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், பூங்காவிற்குள் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாகவும், பெண்கள் கழிப்பறையில் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.