திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி இன்று (பிப். 13) மாலை 6 மணி அளவில் தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது. இந்தப் போட்டி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வாலிபால் வீரர்கள் கலந்து கொண்டு விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர்.