திருமயம் அருகே கீழசேவல்பட்டியில் உள்ள பட்டாசு தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் கருப்பையா என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும், அங்கு வளர்க்கப்பட்ட இரண்டு நாய்களும் உயிரிழந்தன. இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.