புதுக்கோட்டை: விவசாயி உயிரை பறித்த கதண்டு - சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அடுத்த மங்காளிப்பட்டியில் நேற்று மருதமுத்து (64) என்பவர் தனது வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது கதண்டு கடித்துள்ளது. உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் காரையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி