புதுக்கோட்டை: சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ₹4.4 லட்சம் மோசடி

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (30) என்பவரிடம், பிள்ளையார்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனி முருகன், சிங்கப்பூரில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹4.4 லட்சம் பணம் பெற்றுள்ளார். கடந்த 4 மாதங்களாக வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்த பழனி முருகன், பின்னர் போலியான நிறுவனத்தில் வேலை இருப்பதாகக் கூறி போலி ஆவணங்களையும் கொடுத்துள்ளார். இது போலி எனத் தெரிய வந்ததும், பாதிக்கப்பட்டவர் புதுக்கோட்டை எஸ்பி-யிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி