புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டார். முகாமில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். இதில் ராயவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.