புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நச்சாந்துபட்டியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெறும் மாநில அளவிலான பெண்கள் கபடிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று (பிப். 3) இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். அவர் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த கபடி வீரர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.