புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியின்போது, விஜயா(46) என்பவர் தனது வீட்டில் மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அவரிடம் இருந்து 38 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, காவல்துறையினர் விஜயாவை கைது செய்து, பின்னர் பிணையில் விடுதலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.