புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி விளக்கு சாலையில் நேற்று சிவலிங்கம் (48) என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொன்னமராவதி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.