நமணசமுத்திரம் அருகே கஞ்சா விற்றவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் அடுத்த கொள்ளைக்காடு வெள்ளாற்றுப் பாலம் அருகே, புதன்கிழமை தர்மேந்திரன்(42) என்பவர் கஞ்சா விற்பனை செய்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்ட நமண சமுத்திரம் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2.2 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 22,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி