புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மோகன் (39) மற்றும் அண்ணாதுரை (73) ஆகியோர் 3 சீட்டு லாட்டரி விற்பனை செய்துகொண்டிருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருமயம் போலீசார் அண்ணாதுரையை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 சீட்டு ஆன்லைன் ரைட்டிங் பேப்பர் மற்றும் ரூ. 3050 பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.