புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில், 2023 ஆம் ஆண்டு ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த சின்னச்சாமி(39) என்பவருக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 21 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், திருமயம் மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் சின்னச்சாமியை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.