புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குளத்துப்பட்டி மணவாள விநாயகர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து சென்று கும்பத்தில் ஊற்றி விழாவை நடத்தினர். திமுக ஒன்றிய செயலாளர் ஆறு சிதம்பரம் உட்பட ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.