புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டி அருகே தேவர்மலையில் உள்ள குடைவரை கோவிலான தேவநாயகி அம்பாள் ஸ்ரீ தேவநாதர் ஸ்ரீ பெருமிழலை குரும்ப நாயனார் சுவாமிக்கு குருபூஜை விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.