புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில், தவெக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் இன்று (ஏப்ரல் 8) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், ஒரு புரோட்டா கடையில் புரோட்டா போட்டு, மக்களிடம் ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்வின் போது தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சியினரும் உடன் இருந்தனர்.