திருமயம் பைக் விபத்தில் விவசாயி பலி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வாளரமாணிக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (48), ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது, சாலையின் குறுக்கே ஓடிவந்த மாடுகள் மீது மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கே. புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி