சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்!

திருமயம் அருகே உள்ள இருதயபுரம் கிறிஸ்துராஜா உயர்நிலைப்பள்ளியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருமயம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமை வகித்து பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், மாண விகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், 1098 கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பாடு பற்றி எடுத்துரைத்தார். தலைமை ஆசிரியர் குயிண் டன் வரவேற்றார். தலைமை காவலர் பூவி, தமிழ் ஆசிரியை அருள்மேரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி