விசாரணையில் அவர்கள், இலுப்பூர் தாலுகா சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜீவா(24), ஒளியமங்களம் கிராமத்தை சேர்ந்த நந்தகுமார்(21) என்பதும், செல்போன், பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய ஒளியமங்களம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் 27 என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை