புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் தனியார் காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் உத்தரவின் பேரில், மாவட்ட அலுவலர் சத்திய கீர்த்தி மற்றும் உதவி மாவட்ட அலுவலர் ப. ஜெய்சங்கர் அறிவுரையின்படி இந்தப் பயிற்சி நடந்தது. பயிற்சியில் பங்கேற்ற தனியார் காவலர்களுக்கு துறை சார்ந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.