புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கிளகரங்கண்மாய் கரையில் உயர் மின்னழுத்த கம்பியில் இன்சுலேட்டர் உடைந்து மின்கம்பத்தில் இருந்த கம்பியில் விழுந்துள்ளது. இதனால் மின் இணைப்பு ஏற்பட்டு தீப்பொறி பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.