புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று (பிப்.23) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.