புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, வேந்தன்பட்டி வள்ளி மகன் தனபால் (19) நேற்று முன்தினம் (அக்.,2) காலை தனது வயலில் டிராக்டரில் உழுதபோது, ஓட்டுநர் அருகில் அமர்ந்துள்ளார். அப்பொழுது நிலை தடுமாறிய டிராக்டரிலிருந்து இவர் கீழே விழுந்து டிராக்டரில் உள்ள கம்பி குத்தியதில் படுகாயம் அடைந்தார். மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.,3) இறந்தார்.