பெரிய மாட்டுவண்டியில் 4 ஜோடிகளும் சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் 12 ஜோடிகளும் கலந்துகொண்டனர். பெரிய மாட்டுவண்டிக்கு போகவர 12 கிலோமீட்டரும் சிறிய மாட்டுவண்டிக்கு போகவர 9 கிலோமீட்டர் எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது. சாலையில் துள்ளிக்குதித்து போட்டிபோட்டுக்கொண்டு சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகளை சாலை நெடுகிலும் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றிபெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டிவந்த சாரதிகளுக்கும் ரொக்கப்பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?