புதுக்கோட்டை: முயல்களை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முயல்கள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதாக பொன்னமராவதி வனச்சரகருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, வனச்சரகர் இராமநாதன் தலைமையில் வனவர் சரவணன் மற்றும் வனக்காப்பளர் கனகவள்ளி ஆகியோர் ரோந்து பணி சென்றனர். அப்போது கம்பி வலைகளை கொண்டு முயல்களை வேட்டையாட முயன்ற 3 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி