புதுக்கோட்டை: வாலிபர் வெட்டிக்கொலை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் வசித்து வந்த பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர் மோகன்ராஜ் (38), வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு வந்த ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது தாய் மற்றும் மனைவி முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி