புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டு ராஜகோபாலபுரம் மற்றும் பிச்சைத்தான்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பு, தெருவிளக்குகள், சாலை குடிநீர் உள்ளிட்டவைகளை அமைத்துத் தர கோரிக்கை மனுக்களை அளித்தனர்.