விவசாயிகளுக்கு புதுகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 26 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறியப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி