புதுகை: குழம்பி போய் தடுமாறும் பக்தர்கள்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழிகாட்டும் பலகையை நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைக்கும் பணிக்காக அகற்றி ஓரமாக வைத்துள்ளனர். சாலை அமைக்கும் பணி முடிந்தும், அந்தப் பலகை மீண்டும் பழைய இடத்தில் நிறுவப்படாததால், வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும் வழியை அறிய முடியாமல் குழப்பமடைந்துள்ளனர். இதனால், அந்த வழிகாட்டும் பலகையை மீண்டும் பழைய இடத்தில் நிறுவ வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி