புதுக்கோட்டை: பாஜகவினரை கைது செய்த காவல்துறை

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மதுபான உழலில் ஈடுபட்ட திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று கோரியும் பாரதிய ஜனதா கட்சியினர் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 170 பேரை கைது செய்து அழைத்துச் சென்றது காவல்துறை.

தொடர்புடைய செய்தி