புதுகைக்கு நேற்று வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக மாற்றுத்திறனாளிகள் 234 தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றார்.