புதுக்கோட்டை மாவட்டம் புதுநகர் அடுத்த பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று எட்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கந்தர்வகோட்டை பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும், இந்து எழுச்சி பேரவை சோழமண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு மருத்துவக் கழிவு ஆலைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.