கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் அமைய உள்ள தனியார் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் 32 நாட்களாக போராட்டம் நீடிக்கிறது. பிசானத்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கந்தர்வக்கோட்டை வர்த்தக நலச்சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆட்டோ ஓட்டுநர்களும் ஆதரவு தெரிவித்து இன்று ஒரு நாள் ஆட்டோவை இயக்கவில்லை.