கீரனூர்: கோயில் மணியை திருடியவர் கைது

கீரனூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் புதுவை காட்டு அய்யனார் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் (ஜூன் 3) நள்ளிரவு பைக்கில் வந்த 3 வாலிபர்களில், ஒருவர் மட்டும் கீழே இறங்கி கோயில் மணியை திருட முயன்றார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து 3 பேரையும் துரத்தினர். பைக்கில் இருந்த 2 பேர் தப்பிவிட ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை அடித்து உதைத்தனர். 

தகவலறிந்த கீரனுார் போலீசார் விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அவர் திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் (23) என்பதும் தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி