பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட அதிகாரி!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செங்கமேடு கிராமத்தில், கிராம மக்களுக்கு முன் அறிவிப்பின்றி 100 நாள் பணியாளர்களை வைத்து கிராம சபை கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது, "இந்த ஒருமுறை தெரியாமல் நடந்து விட்டது. இனிமேல் இந்த தவறு நடக்காது" என்று ஊராட்சியில் பணிபுரியும் கிளார்க் முருகேசன் கூறிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்களுக்குத் தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி