புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து திருச்சிக்கு பைக்கில் சென்ற யாசர் அராபத் (21) மற்றும் முகமது தலித் (21) ஆகியோர், கொத்தமங்கலப்பட்டி அருகே எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.