மங்கனூர் கிராம மாணவர்களுக்கு பேருந்து வசதி கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இக்கிராம மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு திருச்சி, தஞ்சை போன்ற பகுதிகளுக்குச் செல்கின்றனர். மாலை நேரங்களில் மங்கனூருக்கு பேருந்து சேவை இல்லாததால், மாணவர்கள் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி பேருந்து சேவை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி