கீரனூரில் இருந்து குளத்தூருக்கு பைக்கில் சென்ற பாண்டியன் (34) மீது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதிவிட்டு தப்பிச் சென்றார். இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை வெள்ளைச்சாமி அளித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.