புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் குருமூர்த்தி-பழனியம்மாள் தம்பதியினர். குருமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். திருமணத்தின் போது போட சொன்ன நகையை கேட்டு மாமனார்-மாமியார் தொல்லை தருவதாக பழனியம்மாள் பெற்றோரிடம் கூறி அழுததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனியம்மாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.