புதுக்கோட்டை மன்னர் கல்லூரி அருகே நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கப் பணியின்போது, பள்ளம் தோண்டி புதிய குடிநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி, குடிநீர் குழாய்கள் வழியாக கழிவுநீர் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.