புதுக்கோட்டை: மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நார்த்தாமலையைச் சேர்ந்த நாகேஷ் (55) என்பவர், நார்த்தாமலை சமத்துவபுரம் சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சுகுமார் அளித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி